உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு!


உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு!
x

ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உக்ரைனுக்கு கூடுதலாக அனுப்பப்படும்.

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 8 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது.

உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷியா இந்த வாரம் 84 ஏவுகணைகளை ஏவி தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. அதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். "உக்ரைன் மக்கள் தங்கள் சுதந்திரம் மற்றும் சுதந்திரத்தை அசாதாரண தைரியம் மற்றும் எல்லையற்ற உறுதியுடன் பாதுகாக்கிறார்கள், உக்ரைன் மக்களுடன் நாங்கள் தொடர்ந்து நிற்போம்" என்று கூறினார்.

ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள், வெடிமருந்துகள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உக்ரைனுக்கு கூடுதலாக அனுப்பப்படும். இதன் மூலம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசாங்கத்தின் கீழ் மொத்தம் 18.3 பில்லியன் டாலர் அளவுக்கு ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story