நியூயார்க்கில் சர்வதேச நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை


தினத்தந்தி 24 Sept 2023 10:15 PM IST (Updated: 24 Sept 2023 10:17 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுசபையின் 78-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நியூயார்க் சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கு சர்வதேச நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்படி, மெக்சிகோ வெளியுறவுத்துறை மந்திரி அலிசியா பார்சேனா, அர்மேனியா வெளியுறவுத்துறை மந்திரி அராரத் மிர்சோயான், பாஸ்னியா வெளியுறவுத்துறை மந்திரி எல்மடின் கோனகோவிக் ஆகியோருடன் ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


Next Story