தாய்லாந்தில் மியான்மர் வெளிவிவகார மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்திப்பு


தாய்லாந்தில் மியான்மர் வெளிவிவகார மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்திப்பு
x
தினத்தந்தி 16 July 2023 4:08 PM IST (Updated: 16 July 2023 4:17 PM IST)
t-max-icont-min-icon

தாய்லாந்து நாட்டில் மியான்மர் வெளிவிவகார மந்திரி தான் ஸ்வேவை நேரில் சந்தித்த மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் முத்தரப்பு நெடுஞ்சாலையை பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.

பாங்காக்,

இந்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகருக்கு நேற்று சென்றடைந்து உள்ளார். அவர், அந்நாட்டு வெளியுறவு மந்திரியை இன்று நேரில் சந்தித்து பேசினார். இதில் மேகாங் கங்கா ஒத்துழைப்புக்கான திட்டம் பற்றிய ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இந்த சந்திப்பில், மனித மற்றும் போதை பொருள் கடத்தல் விவகாரங்களை பற்றியும் அவர் எழுப்பினார். இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், சமீப காலங்களில் சவால்களை சந்தித்த திட்டங்களின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டது.

அதில் குறிப்பிடும்படியாக, இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை பற்றியும் வலியுறுத்தப்பட்டது.

நமது எல்லை பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திர தன்மையை உறுதி செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் பேசப்பட்டது. சமீபத்தில் இது மிகவும் தீவிர கவலை கொள்ள செய்யும் வகையில் இருந்தது. நிலைமையை மோசமடைய செய்ய கூடிய எந்த செயலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த முத்தரப்பு நெடுஞ்சாலையானது 1,300 கி.மீ. தொலைவில் உருவாகி வருகிறது. இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டதும், மியான்மர் மற்றும் தாய்லாந்து இடையேயான வர்த்தக உறவுகள் மேம்படும். பயணம் மற்றும் சுற்றுலா தளங்களுக்கான ஆற்றலை பயன்படுத்தி கொள்ளவும் முடியும்.


Next Story