அமெரிக்காவின் கட்டளையை ஏற்று அமைதி பேச்சுவார்த்தையை உக்ரைன் நிறுத்தியுள்ளது - ரஷியா குற்றச்சாட்டு

அமெரிக்காவின் கட்டளையை ஏற்று அமைதி பேச்சுவார்த்தையை உக்ரைன் நிறுத்தியுள்ளது - ரஷியா குற்றச்சாட்டு
x

ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்காவின் கட்டளையின் பேரில் உக்ரைன் நிறுத்தி வைத்துள்ளது என ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

மாஸ்கோ,

ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்காவின் கட்டளையின் பேரில் உக்ரைன் நிறுத்தி வைத்துள்ளது என ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறியதாவது, "உக்ரைன் விவகாரத்தை கையாளும் அமெரிக்க கடுப்பாட்டாளர்களின் உத்தரவின் பேரில் ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை உக்ரைன் நிறுத்தி வைத்துள்ளது.

உக்ரைன் குழுவினர் தங்கள் பேச்சுவார்த்தையில் 'என்ன செய்தார்கள்?' என்பதைப் பற்றி பேச வேண்டும். இப்போதும் பேச்சுவார்த்தையை தொடர ரஷியா தயாராக உள்ளது.

ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த உக்ரைன் அழைப்பு விடுத்து, அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டனர். இருப்பினும், ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்தது.

உக்ரைன் ரஷியாவுடனான பேச்சுவார்த்தையை தவறானதாக அவர்கள் தரப்பு விவரித்தது. அவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறும் நாட்டை மாற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

தற்போதைய நிலைமையை, சுமூகமாக தீர்வு எட்டுவதற்கான ரஷிய கொண்டுவந்த முன்மொழிவுகளுக்கு உக்ரைன் எந்த பதிலும் அளிக்கவில்லை" என்று அவர் கூறினார்.

ரஷியாவும் உக்ரைனும் கடைசியாக நேருக்கு நேர் அமைதிப் பேச்சுவார்த்தையை மார்ச் 29 அன்று துருக்கியில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story