ரஷிய தாக்குதலில் உக்ரைனில் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு தகர்ப்பு! 1 லட்சம் டன் எரிபொருள் சேதம்


ரஷிய தாக்குதலில் உக்ரைனில் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு தகர்ப்பு! 1 லட்சம் டன் எரிபொருள் சேதம்
x

Image Credit:AFP

தினத்தந்தி 23 Oct 2022 10:01 PM IST (Updated: 23 Oct 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

1 லட்சம் டன் விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்று அழிக்கப்பட்டதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் -ரஷியா இடையிலான போர் பல மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷிய ஏவுகணைகள் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதன் காரணமாக உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் மின் தடையால் இருளில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில், 1 லட்சம் டன் விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்று அழிக்கப்பட்டதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், "செர்காசி பகுதியில் உள்ள சிம்லா கிராமத்தில் உள்ள ஒரு எரிபொருள் கிடங்கில் உக்ரைன் விமானப் படைகளுக்கு உபயோகப்படுத்த 1 லட்சம் டன்களுக்கும் அதிகமான விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த எரிபொருள் கிடங்கு அழிக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story