இங்கிலாந்தில் ஆளுங்கட்சி தலைவரை நீக்கினார், ரிஷி சுனக்


இங்கிலாந்தில் ஆளுங்கட்சி தலைவரை நீக்கினார், ரிஷி சுனக்
x

இங்கிலாந்தில் ஆளுங்கட்சி தலைவரை அந்நாட்டு பிரதமரான ரிஷி சுனக் நீக்கினார்.

லண்டன்,

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இருந்தவர் நதிம் ஸகாவி. இவர் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்தின் கருவூலத்துறை தலைவராக இருந்தார்.

அப்போது இவர் கோடிக்கணக்கில் வரி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பிரதமர் ரிஷி சுனக் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நதிம் ஸகாவியை நீக்கி, ரிஷி சுனக் உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக ஸகாவிக்கு, சுனக் எழுதிய கடிதத்தில், தனது அரசு ஒவ்வொரு மட்டத்திலும் ஒருமைப்பாடு, தொழில்முறை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம் என குறிப்பிட்டு இருந்தார்.


Next Story