கருக்கலைப்பு சட்டத்திற்கு அனுமதி வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்


கருக்கலைப்பு சட்டத்திற்கு அனுமதி வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
x

கருக்கலைப்பு சட்டத்திற்கு அனுமதி வழங்கி ஐக்கிய அரபு அமீரகத்தின் மந்திரிசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தின் மந்திரிசபையில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக உடனடியாக புகாரளிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், கர்ப்பமாகி 120 நாட்களுக்குள் கருக்கலைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்த சட்டம் கூறுகிறது.

கட்டாய பாலியல் உறவுக்கு ஆளாகி கர்ப்பமான பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமான பெண்கள் ஆகியோருக்கு இந்த சட்டம் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமெரிக்காவின் 9 மாகாணங்களில் உள்ளதை விட தாராளமயமாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக கருக்கலைப்புக்கான பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2022-ம் ஆண்டு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story