ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதநேயத்திற்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர்


ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதநேயத்திற்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர்
x

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஹமீது யாசின் என்பவருக்கு மனிதநேயத்திற்கான கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் அந்நாட்டில் அதிக முதலீடு செய்யும் தொழிலதிபர்கள் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வருகிறது. கோல்டன் விசா என்பது ஐக்கிய அமீரகத்தின் குடியுரிமை போன்றது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் பத்து வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

அந்த வகையில் பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர். மேலும், தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், திரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலருக்கும் இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா, இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், கொரோனா காலக்கட்டம் மற்றும் பிற சமயங்களில் சமூக சேவையில் ஈடுபடுபவர்களை கவுரப்படுத்தும் வகையில் ஹுமானிடேரியன் பயனிர் கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த விசாவை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஹமீது யாசின் என்பவருக்கு வழங்கியுள்ளது.

மனிதநேயத்திற்கான கோல்டன் விசாவை பெரும் முதல் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story