உலகளவில் 3-வது முறையாக தகவல் பரிமாற்றத்தில் மீண்டும் செயல் இழந்த டுவிட்டர் நிறுவனம்


உலகளவில் 3-வது முறையாக தகவல் பரிமாற்றத்தில் மீண்டும் செயல் இழந்த டுவிட்டர் நிறுவனம்
x

உலகளவில் 3-வது முறையாக தகவல் பரிமாற்றத்தில் மீண்டும் செயல் இழந்த டுவிட்டர் நிறுவனம்.

வாஷிங்டன்,

உலகின் முன்னணி தகவல் தொடர்பு வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கையகப்படுத்தினார். எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின்பு நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். முதல் கட்டமாக ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அடுத்து டுவிட்டர் அலுவலகத்தில் இருக்கைகள் மற்றும் ஓய்வு அறைகள் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் டுவிட்டர் செயல்பாடு திடீரென முடங்கியது. இதற்கு எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதன்பின்பு இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாது என எலான் மஸ்க் கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை டுவிட்டரின் தகவல் பரிமாற்றம் தடைபட்டது. இப்போது 3-வது முறையாக நேற்று மீண்டும் டுவிட்டர் செயல்பாடு முடங்கியது.

அமெரிக்காவில் நேற்று முன்தினம் இரவு முதல் இந்த நிலை ஏற்பட்டது. பல பயன்பாட்டாளர்களின் கணக்குகள் செயல்படவில்லை. இது தொடர்பாக டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் புகார் அளித்தனர். அதில் தங்கள் தகவல்கள் பரிமாறப்படவில்லை என்றும், டுவிட்டர் தளம் இயங்கவில்லை எனவும் கூறினர்.

இந்த நிலையில் நேற்று காலை முதல் டுவிட்டர் மீண்டும் இயங்க தொடங்கியது. இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்தனர். அதே நேரம் சிலர் டுவிட்டரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டனர்.


Next Story