டி.வி. விவாத நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர்கள் திடீர் கைகலப்பு.!


டி.வி. விவாத நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர்கள் திடீர் கைகலப்பு.!
x
தினத்தந்தி 30 Sept 2023 2:31 AM IST (Updated: 30 Sept 2023 2:44 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் டி.வி. விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசியல் விமர்சகர்கள் திடீரென தாக்கிக்கொண்டனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் உள்ள பிரபல டி.வி.சேனல் சார்பில் விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் இம்ரான்கானின் வக்கீல் ஷெர் அப்சல் கான் மார்வாட், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் அப்னான் உல்லா கான் என முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி தொடங்கி நேரலையில் ஒளிபரப்பானது. அப்போது முன்னாள் பிரதமர் இம்ரான்கானை யூதர்களின் முகவர் என உல்லா கான் விமர்சித்தார். இதனால் அப்சல்கானுக்கும், அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றியதில் திடீரென அப்சல்கான் எழுந்துபோய் உல்லாகானை சரமாரியாக தாக்கினார். இதனையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓடிச்சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். இதுகுறித்த காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story