துருக்கி: கால்பந்து மைதானத்தில் வெடித்த வன்முறை - 7 பேர் கைது


துருக்கி: கால்பந்து மைதானத்தில் வெடித்த வன்முறை - 7 பேர் கைது
x

மைதானத்திற்குள் சிலர் பட்டாசுகளை கொளுத்தி தூக்கிப் போட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்காரா,

துருக்கி நாட்டில் உள்ள பர்சா நகரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் குர்து இன மக்கள் அதிகம் வாழும் பகுதியைச் சேர்ந்த அணி பங்கேற்று விளையாடியது. அந்த அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்த்தரப்பினர் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் வெடித்த நிலையில், மைதானத்திற்குள் சிலர் பட்டாசுகளை கொளுத்தி தூக்கிப் போட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களையும் மைதானத்திற்குள் வீசி எறிந்தனர். இதனால் அங்கு ரசிகர்களிடையே வன்முறை உருவானது.

இதையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story