துனிசியாவில் முன்னாள் பிரதமர் கைது
துனிசியாவில் முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டார்.
துனிஸ்,
வடக்கு ஆப்பிரிக்க நடானா துனிசியாவில் கடந்த 2011 முதல் 2013 வரை பிரதமராக ஹமாடி ஜெபாலி (வயது 74) இருந்து வந்தார். மேலும் நாட்டின் பிரதான கட்சியான எனக்தாவின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்தநிலையில் ஜெபாலி பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டது தெரிந்தது.
இதனால் நாட்டு அதிபர் கைஸ் சயீத் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியை கலைத்து ஜெபாலியின் எம்.பி. பதவியை நிறுத்திவைத்தார். பின்னர் எனக்தா கட்சியின் மூத்த உறுப்பினர்களின் வீட்டில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அப்தெல் கரீம் ஹரோனி, ராச்சேத் கானோசி போன்ற எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைத்தனர்.
இந்தநிலையில் போலீசார் ஜெபாலி வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து அவரை கைது செய்து துனிசில் உள்ள சிறைக்கு அழைத்து சென்றனர்.