பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மாடலில் இன்றைய இந்தியா: ஐ.நா.வில் இந்திய தூதர் பேச்சு


பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மாடலில் இன்றைய இந்தியா:  ஐ.நா.வில் இந்திய தூதர் பேச்சு
x

புதிய தொழில் நுட்ப உதவியுடன் மகளிர் மற்றும் சிறுமிகள் பலன் அடையும் வகையில் நவீன இந்தியா செயல்பட்டு வருகிறது என ஐ.நா.வில் இந்திய தூதர் பேசியுள்ளார்.


ஐ.நா. சபை,


சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழலில், ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ் ஐ.நா.வில் பேசும்போது, மகளிர் மற்றும் சிறுமிகள் பலனடைவதற்காக புதிய தொழில் நுட்பங்களை குவித்து புதிய இந்தியாவானது இன்று இயங்கி வருகிறது.

பெண்கள் இல்லத்தரசிகளாக மட்டுமே இனி பார்க்கப்பட கூடாது. அவர்கள் நாட்டை கட்டமைப்பவர்களாகவும் பார்க்கப்பட வேண்டும் என சந்தேகமேயின்றி தெரிவித்த பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை அடிப்படையாக கொண்டு இது செயல்படுகிறது.

இந்தியா இன்று, மகளிருக்கான வளர்ச்சி என்ற மாடலில் இருந்து மகளிர் தலைமையிலான வளர்ச்சி என உருமாற்றம் பெற்று வருகிறது.

எங்களது தலைமையிலான ஜி-20 மாநாட்டில் மகளிர் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது என்ற முடிவை எடுப்பதில், இந்தியாவின் இந்த உருமாற்றம் பிரதிபலித்து உள்ளது.

வருங்காலத்திற்கு நாம் தயாராக வேண்டும் என்றால், கருத்துகளை பரிமாறி கொள்ளும் விவாதத்தின் மைய பொருளாக மற்றும் முடிவை எடுக்கும் நடைமுறை ஆகியவற்றில் மகளிரை இடம் பெற செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.


Next Story