அமெரிக்காவில் உள்ள இந்துக்களின் ஆற்றல், அதிக சக்தி வாய்ந்தது: ஷீலா ஜாக்சன் லீ
நாம் தெய்வீக தன்மை வாய்ந்தவர்கள், அதனால், நல்ல விசயங்களை செய்யும் திறன் நமக்கு உள்ளது என அமெரிக்க நாடாளுமன்றவாதி ஷீலா ஜாக்சன் லீ கூறியுள்ளார்.
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்காவில் உள்ள இந்துக்களின் உரிமைகளுக்காக வாதிடும் அமைப்புகளில் ஒன்றாக அமெரிக்கன்போர்இந்தூஸ் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில், அமெரிக்காவின் கேபிட்டால் ஹில் பகுதியில் முதன்முறையாக உச்சிமாநாடு ஒன்று நடந்தது.
இதில், அமெரிக்க நாடாளுமன்றவாதியான ஷீலா ஜாக்சன் லீ என்பவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, அமெரிக்காவில் உள்ள இந்துக்களின் ஆற்றல் சக்தி வாய்ந்தது. நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அமெரிக்கா முழுவதும் உள்ள இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். அது ஒரு சக்தி வாய்ந்த படையாக இருக்கும் என கூறியுள்ளார்.
அவர் தனது உரையின்போது, தெய்வீகத்தன்மையை புரிந்து கொள்வதற்காக கற்று கொண்டு இருப்பதுடன், நம் ஒவ்வொருவருரிடமும் உள்ள தெய்வீகத்தன்மைக்கான உணர்வை புரிந்து கொள்ளவும் கற்று வருகிறேன் என கூறியுள்ளார்.
நாம் தெய்வீக தன்மை வாய்ந்தவர்கள். அதனால், நல்ல விசயங்களை செய்யும் திறன் நமக்கு உள்ளது. இந்திய பாரம்பரியம் அல்லாத மக்களும், நல்ல விசயங்களுக்காக அதன் நம்பிக்கை தன்மையை தத்தெடுத்து கொள்ள முயன்று வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து ஜனநாயகத்தின்படி பணியாற்ற முடியும் என கூறியுள்ள அவர், நாம் அனைவருக்கும் சவால்கள் உள்ளன என கூறியுள்ளார்.