ஆஸ்பத்திரியில் இருந்து போப் ஆண்டவர் டிஸ்சார்ஜ்
அவர் முன்பை விட தற்போது நலமுடன் உள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் செர்ஜியோ அல்ச்பீரி தெரிவித்துள்ளார்
ரோம்,
போப் ஆண்டவர் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே கடந்த 7-ந் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அவரது உடல்நலம் வேகமாக தேறி வருவதாக டாக்டர்கள் கூறினர்.
இந்தநிலையில் ஆபரேஷன் முடிந்த 9 நாட்களுக்கு பிறகு நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகன் திரும்பினார். அவர் முன்பை விட தற்போது நலமுடன் உள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் செர்ஜியோ அல்ச்பீரி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story