ஜின்பிங் முன்னிலையில் சீன முன்னாள் அதிபரை கூட்டத்தில் இருந்து வெளியே இழுத்து சென்ற மர்மம்...


ஜின்பிங் முன்னிலையில் சீன முன்னாள் அதிபரை கூட்டத்தில் இருந்து வெளியே இழுத்து சென்ற மர்மம்...
x

சீன அதிபர் ஜின்பிங் முன்னிலையில், கட்சி கூட்டத்தில் இருந்து சீன முன்னாள் அதிபர் ஹூ ஜிந்தாவோ வெளியே இழுத்து செல்லப்பட்டார்.



பீஜிங்,


சீனாவில் அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஹூ ஜிந்தாவோ (வயது 79).

இந்நிலையில், கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டத்தின் நிறைவு விழா இன்று நடந்தது. இதில், சீன அதிபர் ஜின்பிங், சீன பிரதமர் லி கெகியாங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அதிபர் ஜிந்தாவோவும் கலந்து கொண்டார்.

சீன கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுவது வழக்கம். இந்த முறை நடந்த கூட்டத்தில் அரசியலமைப்பில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என கூறப்படுகிறது. இதன்படி, ஜின்பிங்கை கட்சியின் மைய புள்ளியாக மாற்றவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதனால், சீனாவின் இறுதி அதிகாரம் பெற்ற நபராக ஜின்பிங் தொடர்ந்து நீடித்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அவர் கட்சி பொது செயலாளராக முயன்று வருகிறார். அல்லது கட்சியின் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

அப்படி ஆன பின்னர், 3-வது முறையாக சீன அதிபர் ஆவதற்கான தடைகள் நீங்கி விடும் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இந்த சூழலில் கூட்டத்தில் இருந்து முன்னாள் அதிபர் திடீரென வெளியேற்றப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கட்சி கூட்டம் இன்றுடன் நிறைவடையும் சூழலில், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி முன்னிலையில், ஜிந்தாவோவை கட்சியின் அடையாளம் தெரியாத பிரமுகர்கள் வெளியே இழுத்து சென்றனர். ஜின்பிங்கை நோக்கி ஜிந்தாவோ ஏதோ கூறுகிறார். ஆனால், அது கேமிராவில் தெளிவாக கேட்கவில்லை.

இந்த சம்பவம் நடந்தது ஏன்? என்பதற்கான காரணம் பற்றி தெளிவாக எதுவும் தெரிய வரவில்லை. அவர் வெளியேற்றப்பட்டபோது, ஜின்பிங் அருகே நின்றிருந்த பிரதமரும் எதுவும் கூறாமல் அமைதியாக நின்று விட்டார்.


Next Story