சோமாலியா: ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 8 பேர் பலி


சோமாலியா: ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 8 பேர் பலி
x
தினத்தந்தி 20 Aug 2022 9:34 AM IST (Updated: 20 Aug 2022 9:38 AM IST)
t-max-icont-min-icon

சோமாலியாவில் உள்ள ஓட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொகடிசு,

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது.

இதன் காரணமாக அரசுப்படைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து இந்த பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் மொகடிசுவில் உள்ள தனியார் ஓட்டலை குறிவைத்து இருமுறை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின், ஒட்டல் உள்ளே புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலிக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


Next Story