இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது... இலங்கை மந்திரி பேட்டி


இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது... இலங்கை மந்திரி பேட்டி
x

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது என்று இலங்கை மந்திரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ், வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் பிடிக்கப்பட்டது குறித்து கேட்டபோது இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது என்றும், பாஸ் நடைமுறையும் இல்லை என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழக பாஜக தலைவரிடம் அரசாங்க ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய ஊடகவியலாளர்கள் இங்கே நேரடியாக வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளை பார்த்துவிட்டு செல்லட்டும். அப்போதுதான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என்று அவர் தெரிவித்தார்.


Next Story