வெனிசுலாவில் கனமழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
வெனிசுலாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது.
கரகஸ்,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, அந்நாட்டின் லாஸ் தெஜேரியாஸ் மாகாணத்தை ஜூலியா புயல் தாக்கியது. கனமழை மற்றும் புயல் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவால் ஏற்கனவே 22 பேர் உயிரிழந்த நிலையில் அந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 60 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story