தைவான் பாதுகாப்பு அமைச்சக இணையதளம் மீது சைபர் தாக்குதல் - தற்காலிகமாக முடக்கம்!


தைவான் பாதுகாப்பு அமைச்சக இணையதளம் மீது சைபர் தாக்குதல் - தற்காலிகமாக முடக்கம்!
x

தைவான் பாதுகாப்பு அமைச்சக இணையதளம் சைபர் தாக்குதல்களால் தற்காலிகமாக செயல்பட முடியாத வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

தைபே,

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு செல்ல இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அறிவித்தது. இதற்கு சீனா, கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சீனாவில் எதிர்ப்பயைும், மிரட்டலையும் புறந்தள்ளிவிட்டு நான்சி பெலோசி நேற்று முன்தினம் தைவான் சென்றார்.

இந்நிலையில், தைவான் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அதன் இணையதளம் சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக ஆப்லைனில் செயல்பட முடியாத வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

சீனாவுடனான பதட்டம் அதிகரித்து வருவதால், இணைய பாதுகாப்பை மேம்படுத்த மற்ற அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.

.இந்த வார தொடக்கத்தில், ஜனாதிபதி அலுவலகம் உட்பட பல அரசாங்க வலைத்தளங்கள் வெளிநாட்டு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகின. அதிலும் குறிப்பாக சீனா மற்றும் ரஷியாவில் இருந்து இந்த சைபர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தைவான் நாட்டு இணையதளம் மீது சைபர் தாக்குதல்; தற்காலிகமாக முடக்கம்


Next Story