ஆஸ்திரேலியாவில் கனமழை: அணை உடையும் அபாயம்; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்


ஆஸ்திரேலியாவில் கனமழை: அணை உடையும் அபாயம்; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
x

ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக வாரகம்பா அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கான்பெரா,

ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ரிச்மண்ட், வின்ட்சர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக சிட்னி நகரில் ரெயில் தண்டவாளத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அங்கு ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் சிட்னி நகரின் முக்கிய நீராதாரமாக உள்ள வாரகம்பா அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே எந்த நேரத்திலும் அணை உடையும் அபாயம் இருப்பதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story