5 ஆயிரம் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள்,நிதி உதவிகள் உக்ரைனுக்கு வழங்க ஸ்வீடன் முடிவு


5 ஆயிரம் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள்,நிதி உதவிகள் உக்ரைனுக்கு வழங்க ஸ்வீடன் முடிவு
x

5 ஆயிரம் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள்,நிதி உதவிகள் உக்ரைனுக்கு வழங்க ஸ்வீடன் அரசு முடிவு செய்துள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 100 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியிருக்கும் ரஷியா, தொடர்ந்து அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மாதக்கணக்கில் நீடிக்கும் ரஷியா- உக்ரைன் போர் சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுத உதவிகள் தேவை என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் உக்ரைன் அதிபரின் வேண்டுகோளை ஏற்று ரஷியா இடையேயான போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுத உதவிகள் வழங்க உள்ளதாக ஸ்வீடன் அரசு அறிவித்துள்ளது.

உக்ரைனில் கிழக்கு பிராந்தியத்தில் ரஷியா அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், ரஷிய தாக்குதலை எதிர்கொள்ள ஏதுவாக ரோபோக்கள், தானியங்கி துப்பாக்கிகள், வெடி மருந்துகள், 5 ஆயிரம் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், நிதி உதவிகள் ஆகியவை உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளதாக ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது.


Next Story