வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் - 7 பேர் உயிரிழப்பு


வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் - 7 பேர் உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

காபூல்,

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா மசூதியில் இன்று தொழுகைக்கு வந்த வழிபாட்டாளர்கள் மத்தியில் இருந்த ஒருவர் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

பாக்லான் மாகாணத்தின் தலைநகர் போல்-இ-கோம்ரி நகரில் இந்த தாக்குதல் நடந்ததாக போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு கொராசன் மாகாணத்தில் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் ஐஎஸ்-ன் பிராந்திய துணை அமைப்பு, நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னாலும் அந்த அமைப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Next Story