இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டதாக தகவல்


இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டதாக தகவல்
x

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு,

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தள்ளது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்ததையடுத்து, பதறிப்போன கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தார்.

கோத்தபய ராஜபக்சே கடற்படை முகாம் தளத்தில் தங்கியிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறியதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் கோத்தபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார்.

இதற்கிடையில் இலங்கையின் இடைக்கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை ஜூலை 13-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டு கோத்தபய ராஜபக்சே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story