பெட்ரோலிய பொருட்கள் கொள்முதலுக்காக இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடன் கேட்கிறது, இலங்கை
பெட்ரோலிய பொருட்கள் கொள்முதலுக்காக இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடனை இலங்கை கேட்க உள்ளது.
கொழும்பு,
அன்னிய செலாவணி பற்றாக்குறையால், இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால், அந்த பொருட்களை பெற ஒவ்வொரு வாய்ப்பையும் இலங்கை பரிசீலித்து வருகிறது.
இலங்கை மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடம் (எக்சிம் வங்கி) 50 கோடி டாலர் (ரூ.3 ஆயிரத்து 750 கோடி) கடன் கேட்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இத்தகவலை இலங்கை எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா தெரிவித்தார். எக்சிம் வங்கியிடம் இலங்கை இதற்கு முன்பும் ரூ.3 ஆயிரத்து 750 கோடி கடன் பெற்றுள்ளது.
இதற்கிடையே, இலங்கையில் நேற்று பெட்ரோல் விலை 24.3 சதவீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் உயர்த்தப்பட்டது.
Related Tags :
Next Story