இலங்கையில் போராட்டம்: ராணுவ வாகனங்கள் தீவிர ரோந்து


இலங்கையில் போராட்டம்: ராணுவ வாகனங்கள்  தீவிர ரோந்து
x

இலங்கையில் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், போராட்டங்களை தடுக்கும் வகையில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு,

பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள், அதிபர் மற்றும் பிரதமரின் அலுவலகங்களை முற்றுக்கையிட்டு கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்த நிலையில், இன்று கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்களை கைப்பற்றியுள்ளவர்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை மீட்டெடுக்க ராணுவத்தினருக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அதிகாரம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், தலைநகர் கொழும்பில் கவச வாகனத்தில் நின்றபடி ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டங்களை தடுக்கும் வகையில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story