600 குழந்தைகளுக்கு தந்தையா? நீதிமன்றம் ஷாக்..!
நெதர்லாந்தில் விந்தணு தானம் மூலம் 550 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையானவருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆம்ஸ்டர்டாம்,
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் ஜேக்கப் (வயது 41). இவர் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு உதவிடும் நோக்கத்தில் விந்தணுக்களை தானம் செய்து வருகிறார்.
இதனை ஒரு சேவையாகத் தொடங்கிய இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் காரணமாகப் பின் நாளில் இதையே தொழிலாக மாற்றி விட்டார்.
நெதர்லாந்து நாட்டின் செயற்கை கருத்தரிப்பு சட்ட விதிமுறைகளின் படி, விந்தணு தானம் மூலம் ஒரு நபர் 12 மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பிற்கு காரணமாக இருக்கக் கூடாது. அதேசமயம் செயற்கை கருத்தரிப்பின் மூலம் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருவர் மட்டுமே தந்தையாக இருக்க அனுமதியும் கிடையாது.
நெதர்லாந்து நாட்டில் உள்ள 11 சேர்க்கை கருத்தரிப்பு மையங்கள், மற்ற நாடுகளில் இரண்டு மையங்கள் என 13 மையங்களின் மூலமாக ஜோனாதன் தனது விந்தணுவை தானம் செய்துள்ளார். இந்த தானங்களின் விவரங்களை வெளிப்படுத்தாமல் இதுவரை 600 குழந்தைகள் பிறப்புக்கு இவர் உதவியாக இருந்துள்ளார். இவர் மூலமாகக் கருவுற்றுப் பிரசவித்த ஒரு பெண்மணி இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சடைந்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இனிமேல் ஜோனாதனின் ஜேக்கப் விந்தணுக்களை தானம் செய்யக் கூடாது எனத் தடை விதித்தது. ஆனால் இவர், வெளிநாடு தம்பதிகள், உள்நாட்டில் உள்ள தம்பதிகள் என அனைவரையும் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு தனது சேவையைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார் என்பதைக் கேட்டு அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருவர் மட்டுமே தந்தை என்றால் இவர் மூலமாக மரபணுக்களின் பரிமாண வளர்ச்சி உலகின் பல்வேறு நாடுகளில் இருக்க கூடும். ஒரே தந்தையின் கீழ் பல்வேறு நாடுகளில் பிறந்த உடன்பிறப்புகள் உண்மை தெரியாமல் எதிர்காலத்தில் திருமணப் பந்தத்தில் ஈடுபட்டால் சகோதரத்துவம் பாழகை விடும் என்பது வேதனைக்குரியவிஷயமாக பார்க்கப்படுகிறது.
பின்னால் தெரிய வந்தால் இவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி விடுவார்கள். இனிமேல் இவர் யாருக்கும் விந்தணு தானம் செய்யக்கூடாது அதற்குத் தடை விதிக்க வேண்டும் என நினைத்து அந்த பெண் ஹாக் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் மற்றொரு தொண்டு நிறுவனமும் ஜோனாதனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்த வழக்கு குறித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்ட நாளிலிருந்து ஜோனாதன் ஜேக்கப் யாருக்கும் இனிமேல் விந்தணு தானம் செய்யக்கூடாது. தனது சேவை தொடர்பாக இனிமேல் விளம்பரப்படுத்தவும் கூடாது" என உத்தரவிட்டார்.
ஒருவேளை நெதர்லாந்து நீதிமன்றத்தின் தடையை அவர் மீறினால் ஒரு லட்சம் யூரோக்கள் செலுத்த நேரிடும். அதாவது இந்திய மதிப்பின்படி 90 லட்சம் ரூபாய் ஆகும்.
ஜோனாதன் ஜேக்கப் இசைக் கலைஞராக இருந்து வருகிறார். தற்போது அவர் கென்யா நாட்டில் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.