கழுத்தில் டை கட்டுவதை நிறுத்துமாறு நாட்டு மக்களுக்கு ஸ்பெயின் பிரதமர் அறிவுறுத்தல்


கழுத்தில் டை கட்டுவதை நிறுத்துமாறு நாட்டு மக்களுக்கு ஸ்பெயின் பிரதமர் அறிவுறுத்தல்
x

வேலைக்கு செல்வபவர்கள் தங்கள் கழுத்தில் டை அணிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் பெட்ரோ சான்செஸ் வலியுறுத்தினார்.

மேட்ரிட்,

ஐரோப்பிய நாடுகளில் நடப்பாண்டில் வெப்ப அலையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் அங்கு சராசரி வெப்பநிலை உயர்ந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதே சமயம் பல இடங்களில் காட்டுத்தீ பற்றி எரியும் நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் வெப்ப அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள டெலோடோ பகுதியில் உள்ள காடுகளில், வெப்ப அலை மற்றும் காற்று காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டு, சுமார் சுமார் 90 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள மரம், செடி உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகியுள்ளன.

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ஆற்றல் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஸ்பெயின் அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். எரிபொருள் தேவைக்காக ரஷியாவை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அதன் ஒரு பகுதியாக ஸ்பெயின் நாட்டில் வேலைக்கு செல்வபவர்கள் தங்கள் கழுத்தில் டை அணிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஸ்பெயினில் தற்போது சராசரி வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், டை அணிவதால் காற்றோட்டத்தை அதிகரித்து மின்சார பயன்பாட்டை குறைக்க வழிவகுக்கும் என அவர் கூறியுள்ளார்.


Next Story