குரங்கு அம்மை பாதிப்பால் பிரேசில், ஸ்பெயினில் தலா ஒருவர் பலி


குரங்கு அம்மை பாதிப்பால் பிரேசில், ஸ்பெயினில் தலா ஒருவர் பலி
x

கோப்புப்படம்

குரங்கு அம்மை பாதிப்பால் பிரேசில், ஸ்பெயினில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.

பிரேசிலியா,

குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை ஆப்பிரிக்காவுக்கு வெளியே பிற எந்தவொரு நாட்டிலும் உயிர்ப்பலி இல்லை என்ற நிலை இப்போது மாறி இருக்கிறது.

இந்த தொற்றுக்கு பிரேசில் நாட்டில் 41 வயதான ஆண் ஒருவர் பலியாகி இருக்கிறார். இவர்தான் ஆப்பிரிக்காவுக்கு வெளியே குரங்கு அம்மையால் பலியான முதல் நபர் என தகவல்கள் கூறுகின்றன. கடுமையான நோய் எதிர்ப்பு பிரச்சினைகள் இவருக்கு இருந்ததாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

ஸ்பெயின் நாட்டிலும் ஒருவர் இந்த தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். பலியானவர் பற்றிய எந்த தகவலையும் அந்த நாடு வெளியிடவில்லை.

குரங்கு அம்மையால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இது என்பது பதிவு செய்யத்தக்கது. இங்கு இந்த நோய், 4,298 பேருக்கு பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story