தென் கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள்; பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது
கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பர்க் விண்வெளி படைத்தளத்தில் இருந்து செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
சியோல்,
வடகொரியா சமீபத்தில் தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோள் அதன் பணிகளை தொடர்ந்து செய்து வரும் நிலையில், தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட முதல் உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன்-9' ராக்கெட் மூலம் தென் கொரியாவின் உளவு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பர்க் விண்வெளி படைத்தளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story