சோமாலியா: கூட்டு போர்ப்பயிற்சியின்போது பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 ராணுவ வீரர்கள் பலி
இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மொகாதிசு,
உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதலை நடத்தி அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே இவர்களை ஒடுக்க ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் இணைந்து சோமாலியா கூட்டுப்போர் பயிற்சியை நடத்தியது. தலைநகர் மொகாதிசுவில் உள்ள ராணுவ தளத்தில் இந்த பயிற்சி நடைபெற்றது. அப்போது மர்ம நபர்கள் சிலர் அங்கு தாக்குதல் நடத்தினர். இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 3 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு பஹ்ரைன் ராணுவ வீரர் என 4 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Related Tags :
Next Story