துப்பாக்கியால் சுடப்பட்ட சுலோவேகியா பிரதமர் உடல் நலம் தேறினார்
கடந்த 2 வாரங்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுலோவேகியா பிரதமர் தற்போது உடல் நலம் தேறியுள்ளார்.
பிராடிஸ்லா,
ஐரோப்பிய நாடான சுலோவேகியாவின் பிரதமர் ராபர்ட் பிகோ (வயது 59). இவர் அங்குள்ள ஹேண்ட்லோவா நகரில் கடந்த 15-ந்தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட மர்ம நபர் ஒருவர் திடீரென பிரதமர் ராபர்ட் பிகோ மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாக துணை பிரதமரும், பாதுகாப்பு துறை மந்திரியுமான ராபர்ட் கலினாக் (வயது 71) தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story