ஷின்ஜோ அபே படுகொலை: போப் ஆண்டவர் இரங்கல்
போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஷின்ஜோ அபே படுகொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாடிகன் சிட்டி,
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷின்ஜோ அபே சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஷின்ஜோ அபே படுகொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஷின்ஜோ அபே படுகொலையை அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். அபேயின் குடும்பத்துக்கும், ஜப்பான் மக்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முட்டாள்தனமான செயலை தொடர்ந்து, ஜப்பானிய சமூகம் அமைதி மற்றும் அகிம்சைக்கான அதன் வரலாற்று உறுதிப்பாட்டில் பலப்படுத்தப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்" என்றார்.