ரஷிய அதிபர் தேர்தல் அறிவிப்பு: பதவியை தக்க வைக்க புதின் ஆர்வம்
ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ,
ரஷிய அதிபராக இருக்கும் புதினின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2024) மே மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் அதிபர் தேர்தலை நடத்துவது குறித்து முடிவு எடுப்பதற்காக ரஷிய நாடாளுமன்றம் நேற்று கூடியது. அப்போது 2024-ம் ஆண்டு மார்ச் 17-ந் தேதி அதிபர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் 5-வது முறையாக அதிபர் பதவிக்கு புதின் போட்டியிடவுள்ளார். இந்த தேர்தலில் அவர் வெற்றிப்பெற்றால் 2036 வரை அதிபர் பதவியில் நீடிக்கும் வகையில் அரசியலமைப்பில் பல சீர்திருத்தங்களை அவர் செய்துள்ளார். எனவே தேர்தலில் வெற்றிப்பெற்று பதவியை தக்க வைப்பதில் அவர் முனைப்புடன் உள்ளார்.
Related Tags :
Next Story