இந்தோனேசியாவில் அடுத்த வாரம் தொடங்கும் ஜி-20 மாநாட்டில் அதிபர் புதின் பங்கேற்க மாட்டார்: ரஷிய தூதரகம் தகவல்
ஜி20 மாநாடு நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறவுள்ளது.
பாலி,
ஜி20 மாநாடு நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் சுற்றுலா தலமான இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தோனேசியாவின் பாலி நகரில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொள்ள மாட்டார். புதினுக்கு பதிலாக ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேசியா செல்லவுள்ளார் என்று இந்தோனேசியாவில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.
பாலிக்கு செல்ல வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யவில்லை, ஆனால் நான் செல்லாவிட்டாலும், உயர்மட்ட ரஷிய தூதுக்குழு அங்கு செல்லும் என்று புதின் கூறியிருந்தார். ஆனால், தற்போது புதின் செல்லவில்லை என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.