உக்ரைனின் கெர்சன் நகரின் மீது ரஷிய படைகள் தாக்குதல்


உக்ரைனின் கெர்சன் நகரின் மீது ரஷிய படைகள் தாக்குதல்
x

கெர்சன் நகரின் மீது ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தத் தொடங்கின. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இருதரப்பிலும் பெரிய அளவிலான உயிரசேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் உக்ரைனின் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த போரில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அவ்வாறு கடந்த மார்ச் மாதம் ரஷிய ராணுவம் உக்ரைனின் கெர்சன் பகுதியை கைப்பற்றிய நிலையில், அதனை உக்ரைன் படை கடந்த மாதம் போராடி மீட்டது. இந்த நிலையில் தற்போது கெர்சன் நகரின் மீது ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கெர்சனில் உள்ள பேர்கால மருத்துவமனை மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கடந்த சனிக்கிழமை கெர்சன் நகரில் நடந்த தாக்குதல் 10 பேர் உயிரிழந்தனர், மேலும் 58 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story