கீவ் நகரில் ரஷிய படைகள் தாக்குதல்; குடிநீர் விநியோகம், மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம்


கீவ் நகரில் ரஷிய படைகள் தாக்குதல்; குடிநீர் விநியோகம், மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம்
x

Image Courtesy : AFP

கீவ் நகரத்தின் மத்திய பகுதிகளில் இன்று அதிகாலை ரஷிய படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கீவ்,

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி படையெடுத்தது. இந்த போரில் உக்ரைனின் உள்கட்டமைப்புகள், மின் நிலையங்கள் ஆகியவற்றை தகர்ப்பதில் ரஷிய ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக டிரோன்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் முறைகளை ரஷிய ராணுவம் பயன்படுத்துகிறது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் மற்றும் உணவுக்கான தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்தின் மத்திய பகுதிகளில் இன்று அதிகாலை ரஷிய படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனால் கீவ் நகரத்தின் உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததால், அங்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மேலும் கீவ் நகரில் மெட்ரோ சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story