சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து கஜகஸ்தானில் பத்திரமாக தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய வீரர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
மாஸ்கோ,
விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டி போடுகின்றன. அதன்படி அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இதற்காக ரஷிய விண்வெளி வீரர் ஒலெக் நோவிட்ஸ்கி, அமெரிக்காவின் லோரல் ஓ ஹாரா மற்றும் பெலாரஸ் நாட்டின் மெரினா வாசிலேவ்ஸ்காயா ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கு தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வந்தனர். இந்தநிலையில் அவர்கள் 3 பேரும் சோயுஸ் விண்கலம் மூலம் நேற்று கஜகஸ்தானில் பத்திரமாக தரையிறங்கினர். அவர்கள் அனைவரும் தற்போது நலமுடன் இருப்பதாக நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story