ராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க நிர்வாண படங்கள் வீடியோக்களை அனுப்பும் உக்ரைன் பெண்கள்


ராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க நிர்வாண படங்கள் வீடியோக்களை அனுப்பும் உக்ரைன் பெண்கள்
x

உக்ரைன் பெண்கள் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்கு நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதாக கூறப்படுகிறது.

கீவ்

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 160 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் ராணுவம் வீரத்துடன் போராடி வருகிறது.

உக்ரைன் பெண்கள் புதினின் ராணுவத்துடன் போரிடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்களின் கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர். உக்ரைன் பெண்கள் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்கு நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, இதெல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது. ராணுவ வீரர்களின் மன உறுதியை உயர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

உண்மையில், ரஷியாவின் சக்திவாய்ந்த ராணுவத்திற்கு எதிராக போராட உக்ரேனிய வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க தேவையான அனைத்தும் செய்யப்படுகின்றன. ஆதாரங்களை மேற்கோள் காட்டி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் பெண்கள் ரஷிய ராணுவத்துடன் சண்டையிடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் கவர்ச்சியான படங்களை அனுப்புகிறார்கள். இதற்காக டெலிகிராம் என்ற சமூக வலைதளத்தில் ஒரு சேனல் உருவாக்கப்பட்டு அதில் பெண்களின் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

உக்ரைனின் தலைநகரான கிவிவில் இருக்கும் ஒரு குழுவால் இவை அனைத்தையும் செய்ய்யப்படுகிறது . அந்த குழுவில், நாட்டின் மூலை முடுக்கிலிருந்து இதுபோன்ற பெண்களின் படங்களும் வீடியோக்களும் வந்து கொண்டிருக்கின்றன. அதன் பிறகு, அது எடுக்கப்பட்டு வீரர்களின் மொபைல் அல்லது பிற சாதனங்களுக்கு மாற்றப்படுகிறது. ஆச்சரியம் என்னவென்றால், இது சில காலமாக நடந்து வந்தது, தற்போது தெரியவந்துள்ளது.

இருப்பினும், இது குறித்து உக்ரைனுக்குள் கலவையான விமர்சனங்கள் உள்ளது. தற்போது அதிமாகானபேர் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது போட்டோஷூட் ஒன்றிற்காக விமர்சனத்திற்கு உள்ளானார், அதிபர் தனது மனைவியுடன் போட்டோஷூட்டில் கலந்து கொண்டதால் விமர்சனம் எழுந்தது.


Next Story