அடுத்த ஆண்டு மார்ச்சில் ரஷிய அதிபர் தேர்தல்...!


அடுத்த ஆண்டு மார்ச்சில் ரஷிய அதிபர் தேர்தல்...!
x

இந்தத் தேர்தலில் புதின் போட்டியிடுவாரா என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

மாஸ்கோ,

ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்த அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையை நாடாளுமன்ற மேலவையான தேசிய கவுன்சில் ஒருமனதாக அங்கீகரித்தது.

இதையடுத்து, 5-ஆவது முறையாக நாட்டின் தலைமையை அதிபர் புதின் ஏற்பதற்கான நடவடிக்கை மேலும் ஒரு படி முன்னேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் புதின் போட்டியிடுவாரா என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும், அடுத்த ஆண்டுடன் அவரது பதவிக் காலம் முடியும் நிலையில், அவர் மேலும் 2 முறை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அரசியல் சாசனத் திருத்தத்தை நாடாளுமன்றம் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளதால் இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் தேர்தலில் புதின் போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் கூறப்படுகிறது. புதினுக்கு எதிரான தலைவர்கள் சிறைகளிலோ, வெளிநாடுகளிலோ இருப்பதாலும், உக்ரைன் போர் மற்றும் துணை ராணுவப் படையான வாக்னர் குழுவின் ஆயுதக் கிளர்ச்சிக்கு இடையிலும் புதினுக்கு மக்களிடையே அதிக ஆதரவு இருப்பதும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் வரும் 2036-ஆம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story