இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷியா தான் பொறுப்பு- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி


இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷியா தான் பொறுப்பு- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
x
தினத்தந்தி 14 July 2022 12:22 PM IST (Updated: 14 July 2022 12:57 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

கீவ்,

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. மக்கள் போராட்டம் அன்னியச்செலாவணி இல்லாமை, விஷம்போல நாளும் ஏறிவரும் விலைவாசி, எரிபொருட்கள் தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு என பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்க, இனியும் பொறுப்பதற்கு இல்லை என்ற நிலையில் இலங்கை மக்கள் வெகுண்டெழுந்தனர். அவர்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கினர்.

இந்த நிலையில் உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷியா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை அனுபவிக்கும் பல நாடுகள் ரஷியாவின் நிகழ்ச்சி நிரலை அனுபவித்துள்ளனர் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் அண்மையில் உரையாற்றியபோது, ​​இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துரைத்த அவர், "அதிர்ச்சியூட்டும் உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஒரு சமூக பிளவுக்கு வழிவகுத்தது. அது எப்படி முடிவடையும் என்பது இப்போது யாருக்கும் தெரியாது" என்றார்.


Next Story