#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் போர்: மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையை கைப்பற்றிய ரஷியா
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 மாதங்களை எட்ட உள்ளது. ஆனாலும், ரஷியா ராணுவத்துக்கு எதிராக உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது.
Live Updates
- 21 May 2022 8:00 PM IST
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 964 அமெரிக்கர்கள் மீது பயண தடை விதித்தது ரஷியா
உக்ரைன் மீது போர் தொடுத்த விவகாரத்தில் அமெரிக்கா உடன் மோதல் போக்கை ரஷியா கையாண்டு வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கன் உள்பட 964 அமெரிக்கர்களுக்கு எதிராக பயண தடை விதிப்பதாக ரஷியா அறிவித்துள்ளது. முன்னதாக, உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கும் சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல் அளித்து இருந்த நிலையில், ரஷியா இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
- 21 May 2022 12:45 PM IST
முன்னாள் உலக செஸ் சாம்பியனை வெளிநாட்டு ஏஜெண்டுகள் பட்டியலில் சேர்த்த ரஷிய அரசு
ரஷியாவின் முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி கேஸ்பரோவ். இவர் ரஷிய அதிபர் புதினுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுபவர் என கூறப்படுகிறது. இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய செய்தியொன்றில், புதினின் அரசாட்சிக்கு கீழ் ரஷிய நீதி அமைச்சகம் முரணான ஒன்று. புதின், கிழக்கு ஜெர்மனியில் உள்ள தனது கூட்டாளிகளை உளவு பார்த்தபோதும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள மக்களின் சொத்துகளை திருடியபோதும் நான் என்னுடைய நாட்டின் பிரதிநிதியாக செயல்பட்டேன்.
புதினுக்கு எதிராக இருப்பது என்பது எப்போதும் ரஷியாவுக்கு ஆதரவானவையாகவே இருக்கும் என அவர் தெரிவித்து உள்ளார். இது ரஷிய அரசில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து கேரி கேஸ்பரோவ் மற்றும் முன்னாள் எண்ணெய் வர்த்தகரான மிக்காயில் கோதர்கோவ்ஸ்கை ஆகிய இருவரையும் ரஷிய நீதி அமைச்சகம் வெளிநாட்டு ஏஜெண்டுகள் என்ற பட்டியலில் சேர்த்து உள்ளது. இதனை அந்த அமைச்சகம் தனது வலைதளத்தில் உறுதி செய்துள்ளது. இந்த வெளிநாட்டு ஏஜெண்டு என்பது சோவியத் ரஷியாவுக்கு எதிரானது என்ற வகையில் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.
புதினுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் கோதர்கோவ்ஸ்கைக்கு உக்ரைன் நிதியுதவி செய்து வருகிறது. கேஸ்பரோவின் நிதிகளும் உக்ரைனில் இருந்தும் மற்றும் மனித உரிமைகள் அமைப்பில் இருந்தும் வருகின்றன என வலைதள தகவல் தெரிவிக்கின்றது.
- 21 May 2022 10:15 AM IST
அசோவ்ஸ்டல் உருக்காலை ரஷிய ஆயுதப்படைகளின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தன
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த படைவீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலைக் கைப்பற்றுவதற்கான பல மாத காலப் போரில் ரஷியா வெற்றி பெற்றதாக அறிவித்து உள்ளது.
அசோவ்ஸ்டல் உருக்காலையை பாதுகாக்கும் கடைசி வீரர்களும் இப்போது சரணடைந்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
531 உக்ரேனிய படை வீரர்கள் அங்கு இருந்து வெளியேறிய பின்னர் நகரமும் அதன் எஃகு ஆலையும் இப்போது "முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளன" என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த நிறுவனத்தின் நிலத்தடி வசதிகள்ரஷிய ஆயுதப்படைகளின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தன" என்று அது ஒரு அறிக்கையில் மேலும் கூறியது.