"ரஷியா தொடர்ச்சியாக அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது" - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு


ரஷியா தொடர்ச்சியாக அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
x

உக்ரைனில் இருந்து ரஷியா பின்வாங்குவது மட்டுமே ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே வழி என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது ராணுவ தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போர் காரணமாக இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

உக்ரைனின் தெற்கு பகுதியில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான 'சாப்போரிஷியா' அமைந்துள்ளது. இந்த பகுதியை உக்ரைன் மீது படையெடுத்த சில நாட்களிலேயே ரஷிய ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்திற்கும் மிகப்பெரிய அணுசக்தி அபாயத்தை ரஷியா ஏற்படுத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் சாப்போரிஷியா அணுமின் நிலையம் அருகே பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டள்ளன. இது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து ரஷியா தொடர்ந்து வெளிப்படையான அணுசக்தி அச்சுறுத்தலை விடுத்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் முழுவதுமாக பின்வாங்குவது மட்டுமே ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே வழி என்றும், இந்த குறித்து உலக நாடுகள் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Next Story