ரஷியா அணு ஆயுதங்கள் மூலம் உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் - செச்சினியா குடியரசின் தலைவர்!


ரஷியா அணு ஆயுதங்கள் மூலம் உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் - செச்சினியா குடியரசின் தலைவர்!
x

உக்ரைனின் லைமன் பகுதியிலிருந்து ரஷிய படைகள் வெளியேற்றப்பட்டுள்ளன.

மாஸ்கோ,

உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் வடக்கில் உள்ள லைமன் பகுதியிலிருந்து ரஷிய படைகள் வெளியேற்றப்பட்டுள்ளன.

லைமன் பகுதியை, ரஷியா தனது ராணுவ செயல்பாடுகளுக்கான தளவாட மற்றும் போக்குவரத்து மையமாக பயன்படுத்தி வந்தது. இந்நிலையில், ரஷிய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் படைகள் சுற்றி வளைத்க்க தொடங்கியதால், தனது படைகள் லைமன் கோட்டையை கைவிட்டதாக அறிவித்தது.

இது உக்ரைனுக்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ரஷியாவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஷியாவுக்கு மிக நெருங்கிய நபரான ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான செச்சினியா குடியரசின் தலைவர் ரம்ஜான் கதிரோவ், "ரஷியா குறைந்த சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி பதிலடி கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைன் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதாவது, "லைமனைக் கைப்பற்றினால், லுஹான்ஸ்க் பகுதிக்குள் உக்ரைன் படைகள் முன்னேற முடியும். லைமன் முக்கியமானது, ஏனெனில் இது உக்ரேனின் டான்பாஸ் பகுதியின் விடுதலையை நோக்கிய அடுத்த படியாகும்.

இதன்மூலம், க்ரெமின்னா மற்றும் சீவிரோடோனெட்ஸ் பகுதிகளுக்கு செல்ல இது ஒரு அருமையான வாய்ப்பு. இது மனரீதியாக மிக முக்கியமானது" என்று தெரிவித்தார்.


Next Story