இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு


இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு
x

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம் உண்டு என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, இவர் அமெரிக்காவைச் சேர்ந்த, 'டிவி' நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் அரச குடும்பத்துடன் அரண்மனையில் வசித்து வந்த இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

அதை தொடர்ந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய அவர்கள் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். ஹாரி-மேகன் தம்பதிக்கு ஆர்ச்சி என்ற 3 வயது மகனும், லிலிபெட் என்ற 1 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகள் இருவரும் அரச குடும்பத்தின் அரச பட்டங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், இனி அவர்கள் முறையாக இளவரசர் ஆர்ச்சி, இளவரசி லிலிபெட் என அழைக்கப்படுவார்கள் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

இதுப்பற்றி பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "இங்கிலாந்து அரச பட்டங்களுக்கான விதிகளின்படி, ஆர்ச்சி மற்றும் லிலிபெட் பிறக்கும்போதே தானாக இளவரசர் மற்றும் இளவரசி ஆக்கப்படவில்லை, ஏனெனில் அவர்கள் அப்போது ராணியாக இருந்த 2-ம் எலிசபெத்தின் கொள்ளுப் பேரக்குழந்தைகள் ஆவர். தற்போது அவர்களின் தாத்தா 3-ம் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியவுடன் அவர்கள் இருவரும் அரச பட்டங்களுக்கு உரிமையை பெற்றனர்" என கூறினார்.


Next Story