ஆஸ்திரேலியா: உயிரியல் பூங்காவில் மர்மமான முறையில் இறந்த கங்காரு இனம் - தீவிர விசாரணை


ஆஸ்திரேலியா: உயிரியல் பூங்காவில்  மர்மமான முறையில் இறந்த கங்காரு இனம் - தீவிர விசாரணை
x

கோப்புப்படம்

ஆஸ்திரேலியாவில் உயிரியல் பூங்காவில் கங்காரு இனம் மர்மமான முறையில் இறந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கங்காரு இனத்தை சேர்ந்த 7 பெண் குவாக்காக்கள் மற்றும் 2 பாறை வலாபிகள் மர்மமான முறையில் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி உயிரியல் பூங்கா நிர்வாகம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக அடிலெய்டு உயிரியல் பூங்கா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கங்காருகள் ஏன் இறந்தன என்பது ஒரு மர்மமாகவே உள்ளது. "தாவர நச்சுத்தன்மை" பெரும்பாலும் காரணமாக இருக்கலாம். கால்நடை மருத்துவர் குழு இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று நம்புகிறது. மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது" என்று அவர் கூறினார்.


Next Story