அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடெனுக்கு குடியுரிமை வழங்கிய ரஷியா


அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடெனுக்கு குடியுரிமை வழங்கிய ரஷியா
x

Image Courtesy: AFP 

எட்வர்டு ஸ்னோடெனுக்கு ரஷியா குடியுரிமை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மாஸ்கோ,

2013ம் ஆண்டில் அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணினி பொறியாளர் எட்வர்டு ஸ்னோடென்னுக்கு ரஷியா குடியுரிமை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ வில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடன், அமெரிக்கா இணையதளங்களை வேவு பார்ப்பதை ரகசிய ஆவணங்கள் மூலம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்ட பின், தான் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதால் ஸ்னோடன் பல ஆண்டுகளாக ரஷியாவில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ஸ்னோடென்னுக்கு ரஷியாவின் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.


Next Story