உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கு நாடுகளை குற்றஞ்சாட்டும் புதின்


உலகளாவிய  உணவு நெருக்கடிக்கு மேற்கு நாடுகளை குற்றஞ்சாட்டும் புதின்
x

ரஷிய அதிபர் புதின், உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கு நாடுகளை குற்றம் சாட்டினார்.

மாஸ்கோ,

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வளர்ந்து வரும் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கு நாடுகளைக் குற்றம் சாட்டினார். ரஷிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது,

நிச்சயமாக, உலக உணவு சந்தையில் என்ன நடக்கிறது என்பதையும், அது சந்தித்து வரும் பிரச்சனைகளையும் ரஷியாவின் மீது திருப்புவதை தற்போது காண முடிகிறது

மேலும், ரஷியாவிற்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் உலகச் சந்தைகளை மோசமாக்குவதுடன், உற்பத்தியை குறைத்து விலைகளை உயர்த்தும்.

உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் பிரச்சனைகளுக்கு ரஷியாவை பலிகடாவாக ஆக்குகிறது. உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதற்கான தனது அரசாங்கம்சலுகைகளை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story