தென்ஆப்பிரிக்காவில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு


தென்ஆப்பிரிக்காவில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு
x

தென்ஆப்பிரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜோகன்னஸ்பர்க்,

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது.

கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக காணொலி காட்சி மூலம் நடந்து வந்த இந்த மாநாடு, இந்த ஆண்டு நேரடி நிகழ்வாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு, தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி விமானம் மூலம் சென்றடைந்ததும், அவரை அந்நாட்டு துணை ஜனாதிபதி பால் ஷிபோகொசா மஷாதிலே வரவேற்றார்.

தென்ஆப்பிரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி நடனம் ஆடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இதன்பின்னர் அவர், தென்ஆப்பிரிக்கா ஓட்டலுக்கு சென்றார். கூடியிருந்த இந்திய வம்சாவளியினரை நோக்கி நடந்து சென்றார். அவரை மக்கள் வரவேற்றனர். பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம் என இந்திய வம்சாவளியினர் முழக்கங்களை எழுப்பினர். பிரதமரின் இந்த பயணம் இரு நாடுகளின் 30-வது ஆண்டு தூதரக உறவை குறிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.


Next Story