பாகிஸ்தான் அதிபரின் தனிச்செயலாளர் பதவி பறிப்பு..!
சர்ச்சைக்குரிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அதிபரின் தனிச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து இடைக்கால பிரதமராக அன்வர் உல்ஹக் பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதலுக்கு 2 சட்ட திருந்த மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அரசு ரகசிய சட்டதிருத்த மசோதா, ராணுவ சட்ட திருத்த மசோதா என்னும் இந்த இரு மசோதாக்களுக்கும் அதிபர் ஆல்வி ஒப்புதல் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த 2 முக்கிய மசோதாக்களுக்கு எவ்வித எதிர்ப்பின்றி ஒப்புதல் அளித்தது தொடர்பாக அதிபர் ஆல்வி மீது சர்ச்சை எழுந்தது. இதனை அதிபர் ஆரிப் ஆல்வி திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
இந்தநிலையில் அதிபர் ஆல்வியின் தனிச்செயலாளர் வாக்கர் அகமது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிபரின் உத்தரவை பின்பற்றி சர்ச்சைக்குரிய மசோதாக்களை திருப்பி அனுப்பாமல் காலம் தாழ்த்தியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பாகிஸ்தான் அதிபர் மாளிகை தரப்பில் கூறப்படுகிறது.
பதவி பறிப்பு குறித்து வாக்கர் அகமது கோர்ட்டை நாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.